செவ்வாய், 1 மே, 2012
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மாநாடு-சென்னை
சனவரி- 21, 2012 அன்று திருச்சியில் தமிழகம் தழுவிய அளவில் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் கூடி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை பலப்படுத்துவது எனும் நோக்கில் புதிய கூட்டமைப்பு உருவாக்க கூடியது.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. சு.ப. உதயகுமார் மற்றும் அதன் அரசியல் குழு பொறுப்பாளர் திரு மனோ.தங்கராஜ் ஆகியோர் வேண்டுகோளின்படி " அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் " எனும் பெயரில் சென்னையில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தலைமைக்குழு உருவாக்கப் பட்டது. சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம்,கோவை, தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை என ஒன்பது மண்டல ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. வெற்றிகரமாக மாநாடு ,பேரணி, பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. சு.ப. உதயகுமார் மற்றும் அதன் அரசியல் குழு பொறுப்பாளர் திரு மனோ.தங்கராஜ் ஆகியோர் வேண்டுகோளின்படி " அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் " எனும் பெயரில் சென்னையில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தலைமைக்குழு உருவாக்கப் பட்டது. சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம்,கோவை, தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை என ஒன்பது மண்டல ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. வெற்றிகரமாக மாநாடு ,பேரணி, பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
திங்கள், 9 ஜனவரி, 2012
கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!
" கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு " என முழங்கி 26-11-2011 அன்று சுனாமி தாக்கிய நினைவு நாளில் "ஊர்திப் பயணம்" நெல்லையிலிருந்து - கூடங்குளம் நோக்கி செல்ல காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு 7-12-2012 அன்று ஊர்திப் பயணம் நடத்தப் பட்டது.
தொடக்க நிகழ்ச்சி நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் துளசியம்மாள்,
அனைத்துத் தமிழகப் பெண்கள் கழக மாநில அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர். உதயகுமார், கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சிதம்பரநாதன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். உறுப்பினர்கள் புஷ்பாராயன், மை.பா. சேசுராசன்,முகிலன் ஆகியோர் உரையாற்றினர்.
கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை கொடி அசைத்து ஊர்திப் பயணத்தைத் தொடக்கி வைத்தார்.
நாங்குநேரியில் தோழர்கள் தூத்துக்குடி மாவட்டச்
செயலாளர் தோழர் ஜெயக்குமார்,துளசியம்மாள் உரையாற்றினர்.வள்ளியூர் பேருந்து நிலையம்முன்புதுளசியம்மாள்,தொ.ஆரோக்கியமேரி ஆகியோர் உரையாற்றினர்.
வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் தங்க.தமிழ்வேலன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சி.எம்.பால்ராஜ், மாநிலக்குழு தோழர் சேலம் கோ. சீனிவாசன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர்அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர். கள்ளிக்குளத்தில் துளசியம்மாள், காஞ்சி மாவட்டச் செயலாளர் தோழர் நடராசன் உரையாற்றினர். சமூகரெங்கபுரம் வழியாக இராதாபுரம் வந்தடைந்த பயணத்தை வாழ்த்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தோழர் சுந்தரம் வாழ்த்திப் பேசினார்.துளசியம்மாள், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் நா.குணசேகரன் உரையாற்றினார். பயணம் கூடங்குளத்திற்குள் மக்களின் அமோக வரவேற்புடன் நுழைந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பங்கெடுத்த 1989 கூடங்குளம் எதிர்ப்பு இயக்க சம்பவங்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தோழர்கள் கொடிகளுடன், கூடங்குளம் தெருக்களில் மக்களும் இணைந்து விண்ணதிர முழக்கமிட்டுவலம் வந்தனர். மக்கள் இயக்கத்தினரின் உபசரிப்புடன் பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரநாதன், உரையாற்றினார். மக்கள் இயக்கம் சார்பில் வழக்குரைஞர் சிவசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார். இடிந்தகரை நோக்கிப் பயணம் செல்லும் வழியில் மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க மாநிலச் செயலாளர் உரையாற்றினார். இடிந்தகரை வீதிகளில் குழந்தைகளும், பெண்களும் கடல் அலைகளுக்குப் போட்டியாக முழக்கமிட்டு போராட்ட மைதானம் வந்தடைந்தனர். போராட்ட மேடையில் தோழர்கள் தொ.ஆரோக்கியமேரி, மீ.த.பாண்டியன், சிதம்பரநாதன் ஆகியோர் உரையாற்றினர். பயணம் நெடுகிலும் 1989இல் தான் எழுதிய கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பாடலை பாடிய சிற்பிமகன் பாடல்களுடன் நிறைவுற்ற பயணத்தை வாழ்த்தி மக்கள் இயக்க நிர்வாகி மில்டன் வாழ்த்திப் பேசினார். பயணக் குழுவினர் இடிந்தகரை, கூடங்குளம் போராட்ட உணர்வுகளுடன் தங்களது ஊர்கள நோக்கி விரைந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை வரலாற்றில் ஒரு வசந்தமாக இப்பயணம் அமைந்தது.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011
தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்'
தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்' மதுரை காளவாசலில் நடைபெற்றது.
உலகத் தமிழர் பேரமைப்பின் க.பரந்தாமன் தொடக்கிவைத்தார். தியாகி இம்மானுவேல் பேரவையின் பூ.சந்திரபோசு, ம.தி.மு.க.வின் புதூர் பூமிநாதன், விடுதலைச் சிறுத்தைகளின் இன்குலாப், தமிழ் தமிழர் இயக்கத்தின் பரிதி, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் கேசவன், மகளிர் ஆயத்தின் அருணா, மக்கள் சனநாயக் குடியரசுக் கட்சியின் செல்வி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் மருத்துவர் சங்கீதா, வழக்குரைஞர்கள் அருணாசலம், வாஞ்சிநாதன், மருத்துவர் சரவணகுமார் ஆகியோர் உரையாற்ற,
புரட்சிக் கவிஞர் பேரவையின் ஐ.ஜெயராமன், அம்பேத்கர் தேசிய இயக்கத்தின் அம்பேத்பாபு, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கத்தின் விடுதலைச் செல்வன், பெரியார் திராவிடர் கழகத்தின் பெரியசாமி,தமிழ்ப்பித்தன், மருத்துவர் ஜெயக்குமார், தொ.ஆரோக்கியமேரி வழக்குரைஞர்கள் விஜயலட்சுமி, பாரதி, பொற்கொடி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முல்லை பெரியாறு அணையின் முன்னாள் செயற்பொறியாளர் சுதந்திர அமல்ராஜ் விரிவாகப் பேசியதோடு கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலையின் மீ.த.பாண்டியன் நிறைவுரையாற்றினார். வழக்குரைஞர். பகவத்சிங் உரையாற்றி, பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011
கூடங்குளம், பரமக்குடி, முல்லை பெரியாறு போராட்டங்களை ஒருங்கிணைப்போம்!
17-12-2011கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கவிதா என்கிற பெண் படுகொலையில் காவல்துறையின் மெத்தனத்தைக் கண்டித்து மாவட்டச் செயலாளர் சி.எம்.பால்ராஜ் தலைமையில்ஆர்ப்பாட்டம்.தோழர் துளசியும் நானும் கண்டன உரையாற்றினோம்.
18-12-2011 கூடங்குளம் பத்திரகாளியம்மன் கோவிலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் இராதாபுரம் நோக்கி " அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் தோழர்கள் துளசி, இராஜ், இராஜா செந்தில் ஆகியோருடன் கலந்து கொண்டேன்.
19-12-2011 நெல்லை பாளையங்கோட்டை, ஜவஹர் திடலில் எஸ்.சி,எஸ்.டி, மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் சி.பி.ஐ. விசாரணை கோரி " பரமக்குடி துப்பாக்கிச் சூடு நூறாவது நாள் கண்டன ஆர்ப்பாட்டம், தலைவர் அம்பேத்கர் தலைமையில், செயலாளர் சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில், சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் தோழர் பழனி அவர்கள் தொடங்கி வைக்க நானும் கண்டன உரையாற்றினேன். தோழர்கள் ராஜமாணிக்கம், நரசிங்கநல்லூர் மாரியப்பன், பேட்டை மாரியப்பன், நம்பி,சவரி, ஆறுமுகம், முத்துகுமார், ஆகியோர் என்னுடன் கலந்து கொண்டனர்.
20-12-2011 முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம், கேரளா இனவெறி அரசியல் கட்சிகளைக் கண்டித்து தேனி வீரபாண்டியில் சபாபதி அவர்கள் தலைமையில் ஊர் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் என்னுடன் சண்முகப்பாண்டி,அய்யன்காளை, கூடலூரில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக் குழு சார்பில் ஐந்தாவது நாள் தொடர் போராட்டத்தில் பிரபு அவர்கள் ஒருங்கிணைப்பில், விவசாயிகள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் மோகன் தலைமையில் கலந்து கொண்டு உரையாற்றினேன். என்னுடன் வீரபாண்டி சிவகுமார் கலந்து கொண்டார்.

திங்கள், 5 டிசம்பர், 2011
"பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு"
விபத்தைப் போல கடந்து போகும் தமிழர் மனோநிலையை மூன்று மாதம் கழித்து உலுக்க எடுத்த முயற்சி. ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் மத்தியில் நிலவும் சாதிய மனோநிலை உருவாக்கிய மௌனத்தைக் கலைக்க பாதிக்கப்பட்ட பரமக்குடி ஒடுக்கப்பட்ட பகுதி மக்களுடன் இணைந்து தியாகி இமானுவேல் பேரவை உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் இணைந்த "பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு" வின் தொடர் முயற்சி........
"பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு" சார்பில் தமிழக அரசின் சம்பத் குழு விசாரனையைப் புறக்கணித்து, முன்னாள் நீதியரசர் மும்பை சுரேஷ் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பொது விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு வழிவிட வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)