புதன், 12 செப்டம்பர், 2012
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
கைது-வேலைநீக்கம்

2012, ஏப்ரல் மாதம் இராயல சீமா கான்க்ரீட் ஸ்லீப்பர்ஸ் நிர்வாகத்தால் பொய்ப்புகாரின் மூலம் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையிலிருந்து.....வெளிவந்த தோழர்கள் செயலாளர்-ராஜ், பொருளாளர்- தங்கப்பாண்டி, இணைச் செயலாளர்- சிவன் ஆகியோருக்கு உள்விசாரணை நாடகம்நடத்தப்பட்டது
..
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே இதைக் காரணம் காட்டி வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலை நீக்கம் செய்வதற்காகவே பொய் வழக்கில், காவல்துறையின் துணையுடன் சதி செய்துள்ளது முதலாளித்துவ எடுபிடி நிர்வாகம்.
வியாழன், 23 ஆகஸ்ட், 2012
10-8-2012 கைது! சிறை.
பெருங்குடி, சின்ன உடைப்பு அறிஞர் அம்பேத்கர் சிலைகள், தியாகி இமானுவேல் சிலை உடைப்பைக் கண்டித்து 8-8-2012 அன்று சின்ன உடைப்பில் பேசியதற்கு அவதூறு வழக்கு பதிவு செய்து வைத்திருந்த காவல்துறை 10-8-2012 அன்று கண்டித்துப் பேசி விட்டுச் சென்ற என்னை பெருங்குடி தாண்டிச் செல்லும்போது பேருந்திலிருந்து இறக்கிக் கைது செய்தது. 10-8-2012 அன்று பேசியதற்கும் சேர்த்து வழக்குப் பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது. 16-8-2012 அன்று பிணையில் விடுதலை ஆனேன்.
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
ஆகஸ்ட்-8, சிலை உடைப்பு-சின்னஉடைப்பு
இன்று 08-08-2012 காலை மதுரை சின்ன உடைப்பில் சிலை உடைப்பைக் கண்டித்து உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் இன்குலாப் தலைமையில் , விடுதலைச் சிறுத்தைகள்: எல்லாளன், ஆற்றலரசு, கனியமுதன், பாண்டியம்மாள், புதிய தமிழகம்: சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, சமத்துவ மக்கள் கட்சி: சரத்குமார், சி.பி.ஐ(எம்): சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி: தங்கராஜ், மள்ளர் களம: சோலை. பழநிவேல்ராசன்,ஆதித் தமிழர் பேரவை:செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ)மக்கள் விடுதலை: மீ.த.பாண்டியன் முடித்துவைத்து உரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகம்:வழக்கறிஞர் பெரியசாமி நன்றி கூறினார். நாளை மீண்டும் கூடுவது எனும் முடிவுடன் மக்கள் கலைந்தனர்.
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
ஆக-7 பெருங்குடி, சின்ன உடைப்பு.
தோழர் பிரகாசமும் நானும் பெருங்குடி, சின்ன உடைப்பு சென்றபோது நாங்கள் கண்ட காட்சி.ஒடுக்கப்பட்ட சமூகம் தலை நிமிர்வதற்காக போராடிய தலைவன் அம்பேத்கர் சிலைகள் தலையில்லாமல். ஆதிக்கத் திமிருக்கு எதிராக தலைநிமிர வைத்த தியாகி இம்மானுவேல் சேகரன் சிலை தலையில்லாமல். சாதிய மோதலை உருவாக்கும் நோக்கம் தெரிகிறது. எதற்காக? செப்-11 என்ன எதிரொலி இருக்கும் என்பதைச் சோதிக்கவா? அரசின் திட்டமிடுதலுக்கு முன்னோட்டமா? வேறு எதையோ திசை திருப்புவதற்கு சதியா? ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை, புரட்சிகர, சனநாயக சக்திகளின் தலையீட்டை சூழல் கோருகிறது.
சனி, 4 ஆகஸ்ட், 2012
புதன், 18 ஜூலை, 2012
பெ.தி.க. தோழர் பழனி நினைவேந்தல்
ஆதிக்க எதிர்ப்புப் போராளி பெரியார்
திராவிடர் கழக கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.பழனி, சி.பி.ஐ கட்சியைச்
சார்ந்த தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கும்பலால் கொலை செய்யப்பட்டார். 15-07-2012
அன்று மாலை ஓசூர்-இராயக்கோட்டையில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் குமார் தலைமையில் பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர்
விடுதலை இராசேந்திரன், இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், மே 17 இயக்கம்- திருமுருகன், தலித் விடுதலைக் கட்சி- செங்கோட்டையன்,
தமிழக மக்கள் உரிமைக் கழக- வழக்குரைஞர் புகழேந்தி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி- வழக்குரைஞர்
ரஜினிகாந்த், சி.பி.ஐ (எம்.எல்)- விந்தைவேந்தன், சேவ் தமிழ்ஸ்- செந்தில், தமிழக
மக்கள் புரட்சிக் கழகம்- அரங்க குணசேகரன், அயோத்திதாசர் ஆய்வு நடுவம்- ராமலிங்கம்,
தமிழக மக்கள் சனநாயகக் கூட்டமைப்பு- குணா, மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்
மாவட்டத் தலைவர் குமார் தலைமையில் பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர்
விடுதலை இராசேந்திரன், இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், மே 17 இயக்கம்- திருமுருகன், தலித் விடுதலைக் கட்சி- செங்கோட்டையன்,
தமிழக மக்கள் உரிமைக் கழக- வழக்குரைஞர் புகழேந்தி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி- வழக்குரைஞர்
ரஜினிகாந்த், சி.பி.ஐ (எம்.எல்)- விந்தைவேந்தன், சேவ் தமிழ்ஸ்- செந்தில், தமிழக
மக்கள் புரட்சிக் கழகம்- அரங்க குணசேகரன், அயோத்திதாசர் ஆய்வு நடுவம்- ராமலிங்கம்,
தமிழக மக்கள் சனநாயகக் கூட்டமைப்பு- குணா, மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






