2-10-2011 அன்று தொடக்க நேரம் 2 மணி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஸ்டாலின் நம்மை விட்டுப் பிரிந்தார். தாழ் இரத்த அழுத்தம் காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது. கட்சியின் கட்டுப்பட்டுக்குழுத் தலைவர் தோழர் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் மத்தியக் குழு, மாநிலக் குழுத் தோழர்கள் மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தினர். 3-10-2011 காலை தோழரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் அடக்கம் நடந்த இடத்தில் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் தமிழரசன், பொதுச் செயலாளர் ஜெ.சிதம்பரநாதன், மத்தியக்குழு உறுப்பினர் சுகுந்தன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் தொ.ஆரோக்கியமேரி, அருணாசலம், ஜெயக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பால்ராஜ், வேல்முருகன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் ராமச்சந்திரன், ஹரி,இ.க.க(மா-லெ)விடுதலை மாவட்டச் செயலாளர் தோழர் பொன்ராஜ், சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இராமர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மோகன்ராஜ், சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் தோழர் பொன்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரபு, தமிழ்ப் புலிகள் நிர்வாகி தாஸ், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என். குணசேகரன், தங்க.தமிழ்வேலன், நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம், மதுரை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வீரபாண்டி, டி.டி.யூ.சி. மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் இராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சங்கரன், போஸ், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழக மாநிலத் துணைத் தலைவர் சிற்பிமகன், மாவட்ட அமைப்பாளர் தோழர் சவரிராஜன், உப்பள சங்க துணைத் தலைவர் முத்து, மீன்பிடி-சங்குகுளி சங்கச் செயலாளர் சுந்தர்ராஜன், இராசாக்குட்டி, பிரபாகரன், வெள்ளைச்சாமி, சுரேஷ் மற்றும் பல்வேறு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். மீனவர் சங்கத் தலைவர் ஆண்டன் கோமஸ் சென்னையிலிருந்து இரங்கல் தெரிவித்திருந்தார். தோழர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு கட்சி ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறது.