வியாழன், 27 டிசம்பர், 2012

டெல்லி - நவ-22,23-2012

நவம்பர்-22, 23 - 2012 அன்று டெல்லி, தீன் தயாள் மார்க், காந்தி அமைத்த அறக்கட்டளை அரங்கில் இ.க.க (மா-லெ) மக்கள் விடுதலை அங்கமாகவுள்ள NCC - National Campaign Committee - தேசிய பிரச்சாரக் குழு  பயிற்சிப் பட்டறை தலைவர் எஸ்.பி.சுக்லா தலைமையில், நடைபெற்றது. எமது கட்சியின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் தோழர் ஜெய.சிதம்பரநாதன் அவர்களும் கலந்து கொண்டோம்.
சமூக நீதி: தலித்ஸ், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் நடப்புப் பிரச்சனைகள் எனும் தலைப்பில் திரு பி.எஸ்.கிருஷ்ணன் உரையாற்ற, உ.பியைச் சார்ந்த தாராபுரி விவாதத்தை முன்வைத்தார்.
நிலம், சுரங்கங்கள்,கனிமங்கள் வாழ்வுரிமைப் பிரச்சனைகள் எனும் தலைப்பில் கே.பி.சக்சேனா உரையாற்றினார்.கர்நாடகாவைச் சேர்ந்த ஹேர்மந்த் விவாதத்தை முன்வைத்தார்.
சி.பி.ஐ(எம் ) பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நடப்பு அரசியல் சூழலும் -பாதையும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
மத்திப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயா மேத்தா நிலம் குறித்த விவாதத்தை முன்வைத்தார்.டெல்லியைச் சேர்ந்த ஆனந்த ஸ்வரூப் வர்மா சனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றி உரையாற்ற உ.பியைச் சேர்ந்த அகிலேந்தர் பிரதாப் சிங் விவாதத்தை முன்வைத்தார்.

 சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஷீலா முஸ்தபா முன்வைத்தார்.
வேலையின்மை குறித்து லால் பகதூர் சிங் முன்வைத்தார். இறுதியில் நடைபெத்ர் அரசிய விவாதத்தில் " புரட்சிகர அரசியல் மேடையின் அவசியம் குறித்து விவாதிக்கப் பட்டது. அனைத்திந்திய மக்கள் முன்னணி " -ALL INDIA PEOPLE'S FRONT  எனும் அமைப்பை பதிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
வெள்ளி, 16 நவம்பர், 2012

தோழர் ஏ.வி 2வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம்.

இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், சனநாயகத் தொழிற் சங்க தலைவர், ஏ.வி என அழைக்கப்படும் தோழர் அ.வெங்கடேசன் அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் கூட்டம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றது.

 தோல் மற்றும் தோல் பொருள் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் சுகுந்தன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் இ.க.க(மா-லெ)மக்கள் விடுதலை கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.அண்ணாதுரை சங்கக கோடி ஏற்றி வைக்க, முதுபெரும் தோழர் கனிபாய் (எ) நல்லசிவம் தோழர் அ.வெங்கடேசன் அவர்களது படத்தைத் திறந்து வைத்தார். பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரநாதன், மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தமிழ்வேலன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கருணாகரன்,சங்க பொருளாளர் தோழர் வழக்குரைஞர் கார்க்கிவேலன் ஆகியோர் உரையாற்றினர்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

அக்டோபர்-29 கோட்டை முற்றுகைஇடிந்த கரையில் செப்-27 அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, அணு உலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் கூடி முடிவெடுத்த அக்டோபர்- 29 சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோர்:
தலைமை: கொளத்தூர் மணி, ஒருங்கிணைப்பாளர்,
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தொடக்கி வைத்தவர்: அய்யா பழ. நெடுமாறன், தமிழர் தேசிய இயக்கம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
மீ.த.பாண்டியன்-இ.க.க( மா.லெ) மக்கள் விடுதலை

கண்டன உரை :
வை.கோ – ம.தி.மு.க
தொல். திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்
பேரா. ஜவாஹிருல்லா – மனித நேய மக்கள் கட்சி
தெகலான் பாகவி – சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா
காலித் முகமது – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
வேல்முருகன் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பெ.மணியரசன் – தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி
பாலசுந்தரம் – சி.பி.ஐ(எம்-எல்) விடுதலை
குணங்குடி அனீபா – தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
வியனரசு – பாட்டாளி மக்கள் கட்சி
கே.எம். செரீப் – தமிழ்நாடு மக்கள் சனநாயகக் கட்சி
அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
தியாகு – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
செந்தில் - சேவ் தமிழ்ஸ்
செல்வி – தமிழ்நாடு மக்கள் கட்சி
தமிழ்நேயன் – தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
பி.டி. சண்முகம் – சி.பி.ஐ(எம்–எல்) ரெட்ஸ்டார்
கிறிஸ்டினா – பெண்கள் முன்னணி
மோகன்ராஜ் - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
கபீரியேல் – மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
ஜெ. கோசுமணி – தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்

மற்றும் பங்கேற்ற அமைப்புகள்:
தமிழகப் படைப்பாளிகள் முன்னணி, பூவுலகின் நண்பர்கள், பி.யு.சி.எல்,
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி, மே 17 இயக்கம்,
தியாகி இமானுவேல் பேரவை, விடுதலைத் தமிழ்ப் புலிகள்,
கொங்கு இளைஞர் பேரவை, தமிழ்ப்புலிகள், காஞ்சி மக்கள் மன்றம்,
புரட்சிகர மக்கள் பாசறை, தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி,
தாளாண்மை உழவர் இயக்கம், இந்திய மீனவர் சங்கம்,
தமிழக மக்கள் விடுதலை முன்னணி, அகில இந்திய மீனவர் சங்கம்,
தமிழர் உரிமை இயக்கம், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்,
புரட்சிகர இளைஞர் முன்னணி, கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம்,
மனித உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, தமிழக இயற்கை உழவர் இயக்கம் மற்றும் அணு உலை எதிர்ப்பு உணர்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள்.செவ்வாய், 2 அக்டோபர், 2012

தோழர் ஸ்டாலின் முதலாமாண்டு நினைவு நாள்-வீரவணக்கம்!

‎2-10-2011 அன்று மரணமடைந்த இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஸ்டாலின் முதலாமாண்டு நினைவு நாள்! நிரப்ப முடியாத அவருடைய வரலாற்றுப் பாத்திரம் என்னால் மறக்க முடியவில்லை. நிரப்பவும் முடியவில்லை. வீரவணக்கம்!

புதன், 26 செப்டம்பர், 2012

கூடங்குளம் - செப் - 18 ஊத்தங்குளி


9-9-2012 அன்று கூடங்குளம் அணு உலை முற்றுகை இடப்பட்டு கடலுக்குப் போட்டியாக கரையில் மக்கள் வெள்ளம .10-9-2012 அன்று காவல்துறை தாக்குதலில் ஈடுபட்டு கடலுக்குள் மக்கள் இறங்கி எதிர்கொண்டனர். காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல் இடிந்தகரை மாதா கோவில், சுனாமி காலனி, கூடங்குளம் தொடர்ந்தது. தமிழ்நாடெங்கும் பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிப்பியக்கங்கள் கட்டமைக்கப்பட்டது. 11-9-2012 அன்று தமிழ்நாடெங்கும் " கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு " சார்பில் மறியல் போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டனர்.

கூடங்குளம் பகுதியில் காவல்துறையின் தாக்குதலைக் கண்ட " அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க " ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் " காவல்துறை தன்னைக் கைது செய்யலாம் , நான் இடிந்தகரை வருகிறேன் " எனக் கூறி இடிந்தகரை வந்தார். கூடியிருந்த மக்கள் வெள்ளம அவர்மீது கண்ணீர் மழை பொழிந்தது. இளைஞர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு கடல் வழியாகப் படகில் சென்றனர்.


13-9-2012 அன்று மதுரையில் " கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு "  கூடி முடிவெடுத்து 16-9-2012 அன்று தூத்துக்குடியில் " மணப்பாடு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், அந்தோணி ஜான் படுகொலைக்கு எதிராகவும், கூடங்குளம் பகுதியிலிருந்து காவல்படைகளை வெளியேற்றக் கோரியும் " தூத்துக்குடியிலிருந்து..,  இடிந்தகரை நோக்கி..... " நடை பயணம் செல்ல முயன்று 200 பேர் பல்வேறு இயக்கத்தினர் கைது செய்யப்பட்டோம். 18-09-2012 அன்று உதயகுமார் தங்கியிருந்த ஊத்தங்குளி கடற்கரை கிராமத்திற்குச் சென்றோம். இடிந்தகரைக்குச் சென்றோம். என்னுடன் எமது கட்சியைச் சேர்ந்த நல்லை மாவட்டச் செயலாளர் துளசி, நெல்லை மாரியப்பன், சேவ் தமிழ்ஸ் பரிமளா பங்கெடுத்தனர்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

செப்-13,2012 தோழர் சுப்பு வீரவணக்க நாள்! சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஒன்றியம் , சிறுவாச்சி ஊராட்சியில் மாடக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நக்சல்பாரித் தோழர் சுப.சுப்பு.

உழைக்கும் மக்கள் விடுதலைக்காக, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகமக்களைத் திரட்டிப் போராடி மக்கள் தலைவனாக வளர்ந்ததைச் சகிக்காத பண்ணை- சாதி ஆதிக்க சக்திகளால் கொலை வழக்கில் இணைக்கப்பட்டார். கண்டிசன் பிணையில் நெல்லையில் உள்ளபோது 1994,செப்-13 அன்று கூலிக் கொலையாளியால் படுகொலை செய்யப்பட்டார்.

புதன், 12 செப்டம்பர், 2012

12-9-2012 கண்டன அறிக்கை!                                                                    பத்திரிக்கை செய்தி
                                    உதயகுமார் அவர்களே! சரணடையாதீர்கள்! 
                                   தமிழக அரசே! காவல்துறையை திரும்பப் பெறு!

கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி கடந்த ஓராண்டிற்கு மேலாக இடிந்தகரையில் திரு உதயகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் அறவழியில் போராடிவருவது அடிப்படை சனநாயக உரிமை. ம.தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி,  மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் மக்கள் விடுதலை, திராவிடர் விடுதலைக் கழகம், எஸ்.யு.சி.ஐ, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, சி.பி.ஐ(எம்-எல்) விடுதலை, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, உள்ளிட்ட தமிழகத்தின் கட்சிகள் இடிந்தகரை மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதுடன், இக்கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்கின்றனர். மார்ச்-19, 2012 காவல் துறை இறக்கப்பட்டதைக் கண்டித்து மார்ச்-23 அன்று நெல்லை பாளை திடலில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு கைதானது குறிப்பிடத்தக்கது. போராடிய மக்கள் மீது ,ஆதரவாளர்கள் மீதுபொய் வழக்குப் போட்டு சிறை வைத்தது. " நான் உங்களில் ஒருத்தி " என தொடக்கத்தில் கூறிய தமிழக முதல்வர் இன்று " அணு உலை எதிர்ப்பாளர்களின் மாய வலையில் சிக்காதீர்கள் " எனக் கூறியுள்ளார். முதல்வர் எந்த மாய வலையில் எதற்காக சிக்கியுள்ளாரோ.             
ஓராண்டுக்கு மேலாக எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் இடிந்தகரையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வந்த ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் மீது 150 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்துள்ளது தமிழக அரசு. செப்-9, அன்று கூடங்குளம் நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையோரம் சென்றவர்கள் துணை ரானுவப்படையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரவு முழுவதும் கடற்கரையில் படுத்திருந்த மக்களை செப்-10 அன்று கடுமையாகத் தாக்கியது தாமிரபரணியை நினைவு படுத்தியது. அப்பாவி மக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடிந்தகரை,கூடங்குளம், கூட்டன்குளி, உள்ளிட்ட ஊர்களில் வீடு வீடாகப் புகுந்து கடுமையாகப் பொருள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். பிளாஸ்டிக் படகுகள் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளனர். தூத்துக்குடி- மனப்பாட்டில் அந்தோணி ஜான் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். மக்கள் பாதிக்கப்படுவதை சகிக்கமுடியாமல் தான் சரணடையத்தயார் என அறிவித்தார். இடிந்தகரை வந்த உதயகுமாரை கூடியிருந்த மக்கள் கைதாகக் கூடாது என மறுத்துள்ளனர். இந்திய, தமிழக அரசுகள் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அணு உலையைத் திறக்க, ஆயுதப்படையை இறக்கி கொடுமை படுத்துகின்றனர். 
      
உதயகுமார் அவர்களே! " நீங்கள் மக்களுக்காகப் போராடி வருகின்றீர்கள். நாடு முழுவதும் அணுஉலை எதிர்ப்பு விவாதமாகியுள்ளது. மக்களின் உணர்வுகளை மதித்து காவல்துறையில் சரணடையாதீர்கள் "என கேட்டுக்கொள்கிறேன். திரு கேஜ்ரிவால் போன்றவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள். 

தமிழக அரசே! முதல்வர் அவர்களே! கூடங்குளத்தில் வீடு வீடாக நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தி வருவதுடன், அப்பாவி மக்களிக் கைது செய்து வருகின்றனர். இக்கொடுஞ்செயல் 
 உடனே நிறுத்தப் படுவதுடன் காவல்துறை திரும்ப அழைக்கப் படவேண்டும்.

தோழமையுடன்,
மீ. த. பாண்டியன், 
தமிழ் மாநிலச் செயலாளர்,
இ.க.க( மா-லெ) மக்கள் விடுதலை,
பேச:9443184051

11-9-2012 மதுரை-மறியல்-கைது!

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

கைது-வேலைநீக்கம்
..
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே இதைக் காரணம் காட்டி வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலை நீக்கம் செய்வதற்காகவே பொய் வழக்கில், காவல்துறையின் துணையுடன் சதி செய்துள்ளது முதலாளித்துவ எடுபிடி நிர்வாகம். 

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

10-8-2012 கைது! சிறை.

பெருங்குடி, சின்ன உடைப்பு அறிஞர் அம்பேத்கர் சிலைகள், தியாகி இமானுவேல் சிலை உடைப்பைக் கண்டித்து 8-8-2012 அன்று சின்ன உடைப்பில் பேசியதற்கு அவதூறு வழக்கு பதிவு செய்து வைத்திருந்த காவல்துறை 10-8-2012 அன்று கண்டித்துப் பேசி விட்டுச் சென்ற என்னை பெருங்குடி தாண்டிச் செல்லும்போது பேருந்திலிருந்து இறக்கிக் கைது செய்தது. 10-8-2012 அன்று பேசியதற்கும் சேர்த்து வழக்குப் பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது. 16-8-2012 அன்று பிணையில் விடுதலை ஆனேன்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஆகஸ்ட்-8, சிலை உடைப்பு-சின்னஉடைப்புஇன்று 08-08-2012 காலை மதுரை சின்ன உடைப்பில் சிலை உடைப்பைக் கண்டித்து உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் இன்குலாப் தலைமையில் , விடுதலைச் சிறுத்தைகள்: எல்லாளன், ஆற்றலரசு, கனியமுதன், பாண்டியம்மாள், புதிய தமிழகம்: சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, சமத்துவ மக்கள் கட்சி: சரத்குமார், சி.பி.ஐ(எம்): சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி: தங்கராஜ், மள்ளர் களம: சோலை. பழநிவேல்ராசன்,ஆதித் தமிழர் பேரவை:செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ)மக்கள் விடுதலை: மீ.த.பாண்டியன் முடித்துவைத்து உரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகம்:வழக்கறிஞர் பெரியசாமி நன்றி கூறினார். நாளை மீண்டும் கூடுவது எனும் முடிவுடன் மக்கள் கலைந்தனர்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஆக-7 பெருங்குடி, சின்ன உடைப்பு.

தோழர் பிரகாசமும் நானும் பெருங்குடி, சின்ன உடைப்பு சென்றபோது நாங்கள் கண்ட காட்சி.ஒடுக்கப்பட்ட சமூகம்  தலை நிமிர்வதற்காக போராடிய தலைவன் அம்பேத்கர் சிலைகள் தலையில்லாமல். ஆதிக்கத் திமிருக்கு எதிராக தலைநிமிர வைத்த தியாகி  இம்மானுவேல் சேகரன் சிலை தலையில்லாமல். சாதிய மோதலை  உருவாக்கும் நோக்கம் தெரிகிறது. எதற்காக? செப்-11 என்ன எதிரொலி இருக்கும் என்பதைச் சோதிக்கவா?  அரசின் திட்டமிடுதலுக்கு முன்னோட்டமா? வேறு எதையோ திசை திருப்புவதற்கு சதியா? ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை, புரட்சிகர, சனநாயக சக்திகளின் தலையீட்டை சூழல் கோருகிறது.

புதன், 18 ஜூலை, 2012

பெ.தி.க. தோழர் பழனி நினைவேந்தல்

ஆதிக்க எதிர்ப்புப் போராளி பெரியார் திராவிடர் கழக கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.பழனி, சி.பி.ஐ கட்சியைச் சார்ந்த தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கும்பலால் கொலை செய்யப்பட்டார். 15-07-2012 அன்று மாலை ஓசூர்-இராயக்கோட்டையில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

மாவட்டத் தலைவர் குமார் தலைமையில் பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், மே 17 இயக்கம்- திருமுருகன், தலித் விடுதலைக் கட்சி- செங்கோட்டையன், தமிழக மக்கள் உரிமைக் கழக- வழக்குரைஞர் புகழேந்தி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி- வழக்குரைஞர் ரஜினிகாந்த், சி.பி.ஐ (எம்.எல்)- விந்தைவேந்தன், சேவ் தமிழ்ஸ்- செந்தில், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்- அரங்க குணசேகரன், அயோத்திதாசர் ஆய்வு நடுவம்- ராமலிங்கம், தமிழக மக்கள் சனநாயகக் கூட்டமைப்பு- குணா, மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்

தோழர் செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம்

இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினரும், சனநாயகத் தொழிற்சங்க (DTUC) மாநிலச் செயலாளரும், என்.எல்.சி. தொழிலாளர் ஒருமைப்பாட்டுச் சங்கத் தலைவருமான தோழர் செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம் 10-07-2012 அன்று மாலை நெய்வேலி பவுனாம்பால் நகரில் நடைபெற்றது. 

கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் நா.குணசேகரன்  தோழர் செல்வராஜ் படத்தைத் திறந்து வைத்தார். 

சனநாயகத் தொழிற் சங்க மையப் பொதுச் செயலாளர்  தோழர் சுகுந்தன், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் தமிழ்வேலன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள்- கோ.சீனிவாசன், அருணாசலம், கருணாகரன், மற்றும் என்.எல்.சி.ரவிச்சந்திரன், சவகர், நவநீதன், ராமலிங்கம், மனோகரன், கென்னடி, கலைமணி, ராஜ்குமார், லட்சுமிநாராயணன், வழக்குரைஞர் கென்னடி மற்றும் தொ.மு.ச. சார்பில் திரு விக்கிரமன், உத்தராசு ஆகியோர் தங்களது நினைவுகளைப் பதிவு செய்தனர். 

கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை கட்சி சார்பில் தோழர் செல்வராஜ் துணைவியார் குணா அவர்களிடம் நிதி அளித்தார். கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ராமர் நன்றி கூறினார்

புதன், 4 ஜூலை, 2012

தோழர் செல்வராஜ் - வீர வணக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினர், சனநாயகத் தொழிற்சங்க மைய (DTUC) மாநிலச் செயலாளர், என்.எல்.சி. தொழிலாளர் ஒருமைப்பாட்டுச் சங்கத் தலைவர்- தோழர் செல்வராஜ் 25-06-2012 அன்று சென்னை-அடையார் மலர் மருத்துவமனையில் மரணத்தைத் தழுவினார்.
28-05-2012 அன்று என்.எல்.சி. நகரியத்திற்குள் விபத்தில் கடுமையான தலைக்காயம் மற்றும் கால எழும்பு முறிவு ஏற்பட்டது. என்.எல்.சி. மருத்துவமனையில் முதலுதவி கூட வழங்கப்படவில்லை. கடலூர், பாண்டிச்சேரி என அலைந்துவிட்டு சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனையில் முயற்சி நடந்து இறுதியாக அடையார்- மலர் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

நெய்வேலித் தொழிலாளர்களின், கட்சித் தோழர்களின், நண்பர்கள், குடும்பத்தினரின் கடுமையான முயற்சியால் காப்பாற்றப்பட்டு சூலை மூன்றாம் வாரம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார். 24-06-2012 அன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மீண்டும் சென்னை மலர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். 25-06-2012 அன்று காலை உயிர் பிரிந்தது. 26-06-2012 அன்று மாலை மாலை என்.எல்.சி. நகரியம் முழுவதும் இறுதி ஊர்வலம் வீரவணக்க முழக்கங்களுடன், என்.எல்.சி. தலைமை அதிகாரி அன்சாரியைக் கைது செய்! எனும் முழக்கங்களுடன் நூற்றுக்கணக்கான ஊர்திகளில் தொழிலாளர்கள், கட்சித் தோழர்கள் அணிவகுக்க நடைபெற்றது. பல்வேறு அரசியல் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டு தோழருக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.

தலைமை அதிகாரி அன்சாரி மீது பத்தாயிரம் கோடி ஊழலை எதிர்த்து இயக்கம் நடத்தியதால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். நகரியத்திற்குள் குடியிருந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். குழந்தைகளை நகரியப் பள்ளியில் படிக்க அனுமதிக்க மறுத்தனர். பணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னும் தோழர் செல்வராஜ் உச்ச நீதி மன்றத்தில் இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரநாதனுடன் இணைந்து அன்சாரி மீது வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற வழிகாட்டுதலுடன் மத்திய புலனாய்வுத் துறை (CBI) நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது. ஊழல் மன்னன் அன்சாரி உயர் நீதி மன்றத்தில் தடைபெற்று தப்பினான். 30-06-2012 அன்று ஓய்வு பெற்ற மறுநாள் சூலை ஒன்றாம் தேதி குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டதாக தொலைகாட்சி மற்றும் செய்திப்பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின், கிராமப்புற உழைக்கும் மக்களின் போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் செல்வராஜ் 80களில் இந்திய மக்கள் முன்னணியின் தலைவர்களில் ஒருவராக செயலாற்றியதால் IPF செல்வராஜ் என இறுதி வரையிலும் அழைக்கப்பட்டார்.

புதன், 30 மே, 2012

மார்ச் - 23,2012 எதிர்ப்பியக்கம்.


மார்ச்-23,2012 நெல்லை - பாளை திடலில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று திரண்ட மக்கள், மற்றும் தலைவர்கள் -
ம.தி.மு.க - வை.கோ,
 நாம் தமிழர் - சீமான், 
த.தே.பொ.க - பெ.மணியரசன், த.தே.வி.இ - தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் - வன்னியரசு,  ஆதித்தமிழர் பேரவை - அதியமான், தமிழ்ப்புலிகள் - திருவள்ளுவன், மே 17 - திருமுருகன், 
சி.பி.ஐ(எம்-எல்) - சங்கரபாண்டியன்,  சேவ் தமிழ்ஸ் - செந்தில், 
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி - ரஜினிகாந்த், 
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன், 
பெண்கள் முன்னணி - கிறிஸ்டி, மற்றும் மனித நேய மக்கள் கட்சி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை -பெ.தி.க - கொளத்தூர்   மணி, ஒருங்கிணைப்பு - இ.க.க(மா.லெ) மக்கள் விடுதலை மீ.த.பாண்டியன். செவ்வாய், 1 மே, 2012

மார்ச்-19,2012 கூடங்குள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி-26,2012 சென்னையில் நடைபெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகு கூடிய "கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு" மார்ச்-19,2012 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது என முடிவு செய்தது. தமிழகத்தில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
  அதே மார்ச்-19,2012 அன்று தமிழக அரசின் காவல்துறை இராதாபுரம் வட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆயுதப்படையைக் குவித்தது. போராட்டக்குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பத்து பேரைக் கைது செய்தது.

மார்ச்- 8,2012 கூடங்குளம் எதிர்ப்பு பெண்கள் மாநாடு!

மார்ச்- 8, 2012 அன்று வள்ளியூரில் நடத்த இருந்த பெண்கள் மாநாடு சங்கரன்கோவில் இடைத்தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால் திட்டமிட்டபடி மாநாடு இடிந்தகரைக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் முதல் அணு உலை எதிர்ப்பு  மக்கள் போராட்டம் நடைபெறும் போராட்டக் களத்திலேயே நடைபெற்றது.