பெருங்குடி, சின்ன உடைப்பு அறிஞர் அம்பேத்கர் சிலைகள், தியாகி இமானுவேல் சிலை உடைப்பைக் கண்டித்து 8-8-2012 அன்று சின்ன உடைப்பில் பேசியதற்கு அவதூறு வழக்கு பதிவு செய்து வைத்திருந்த காவல்துறை 10-8-2012 அன்று கண்டித்துப் பேசி விட்டுச் சென்ற என்னை பெருங்குடி தாண்டிச் செல்லும்போது பேருந்திலிருந்து இறக்கிக் கைது செய்தது. 10-8-2012 அன்று பேசியதற்கும் சேர்த்து வழக்குப் பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது. 16-8-2012 அன்று பிணையில் விடுதலை ஆனேன்.
வியாழன், 23 ஆகஸ்ட், 2012
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
ஆகஸ்ட்-8, சிலை உடைப்பு-சின்னஉடைப்பு
இன்று 08-08-2012 காலை மதுரை சின்ன உடைப்பில் சிலை உடைப்பைக் கண்டித்து உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் இன்குலாப் தலைமையில் , விடுதலைச் சிறுத்தைகள்: எல்லாளன், ஆற்றலரசு, கனியமுதன், பாண்டியம்மாள், புதிய தமிழகம்: சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, சமத்துவ மக்கள் கட்சி: சரத்குமார், சி.பி.ஐ(எம்): சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி: தங்கராஜ், மள்ளர் களம: சோலை. பழநிவேல்ராசன்,ஆதித் தமிழர் பேரவை:செல்வம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ)மக்கள் விடுதலை: மீ.த.பாண்டியன் முடித்துவைத்து உரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகம்:வழக்கறிஞர் பெரியசாமி நன்றி கூறினார். நாளை மீண்டும் கூடுவது எனும் முடிவுடன் மக்கள் கலைந்தனர்.
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
ஆக-7 பெருங்குடி, சின்ன உடைப்பு.
தோழர் பிரகாசமும் நானும் பெருங்குடி, சின்ன உடைப்பு சென்றபோது நாங்கள் கண்ட காட்சி.ஒடுக்கப்பட்ட சமூகம் தலை நிமிர்வதற்காக போராடிய தலைவன் அம்பேத்கர் சிலைகள் தலையில்லாமல். ஆதிக்கத் திமிருக்கு எதிராக தலைநிமிர வைத்த தியாகி இம்மானுவேல் சேகரன் சிலை தலையில்லாமல். சாதிய மோதலை உருவாக்கும் நோக்கம் தெரிகிறது. எதற்காக? செப்-11 என்ன எதிரொலி இருக்கும் என்பதைச் சோதிக்கவா? அரசின் திட்டமிடுதலுக்கு முன்னோட்டமா? வேறு எதையோ திசை திருப்புவதற்கு சதியா? ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை, புரட்சிகர, சனநாயக சக்திகளின் தலையீட்டை சூழல் கோருகிறது.
சனி, 4 ஆகஸ்ட், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)