புதன், 30 மே, 2012

மார்ச் - 23,2012 எதிர்ப்பியக்கம்.


மார்ச்-23,2012 நெல்லை - பாளை திடலில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று திரண்ட மக்கள், மற்றும் தலைவர்கள் -
ம.தி.மு.க - வை.கோ,
 நாம் தமிழர் - சீமான், 
த.தே.பொ.க - பெ.மணியரசன், த.தே.வி.இ - தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் - வன்னியரசு,  ஆதித்தமிழர் பேரவை - அதியமான், தமிழ்ப்புலிகள் - திருவள்ளுவன், மே 17 - திருமுருகன், 
சி.பி.ஐ(எம்-எல்) - சங்கரபாண்டியன்,  சேவ் தமிழ்ஸ் - செந்தில், 
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி - ரஜினிகாந்த், 
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி - வேல்முருகன், 
பெண்கள் முன்னணி - கிறிஸ்டி, மற்றும் மனித நேய மக்கள் கட்சி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை -பெ.தி.க - கொளத்தூர்   மணி, ஒருங்கிணைப்பு - இ.க.க(மா.லெ) மக்கள் விடுதலை மீ.த.பாண்டியன். 



செவ்வாய், 1 மே, 2012

மார்ச்-19,2012 கூடங்குள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி-26,2012 சென்னையில் நடைபெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகு கூடிய "கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு" மார்ச்-19,2012 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது என முடிவு செய்தது. தமிழகத்தில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
  அதே மார்ச்-19,2012 அன்று தமிழக அரசின் காவல்துறை இராதாபுரம் வட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆயுதப்படையைக் குவித்தது. போராட்டக்குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பத்து பேரைக் கைது செய்தது.

மார்ச்- 8,2012 கூடங்குளம் எதிர்ப்பு பெண்கள் மாநாடு!

மார்ச்- 8, 2012 அன்று வள்ளியூரில் நடத்த இருந்த பெண்கள் மாநாடு சங்கரன்கோவில் இடைத்தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால் திட்டமிட்டபடி மாநாடு இடிந்தகரைக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் முதல் அணு உலை எதிர்ப்பு  மக்கள் போராட்டம் நடைபெறும் போராட்டக் களத்திலேயே நடைபெற்றது.

சனவரி-29,2012 கூடங்குளம் - முல்லை பெரியாறு -

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மாநாடு-சென்னை

சனவரி- 21, 2012 அன்று திருச்சியில் தமிழகம் தழுவிய அளவில் முற்போக்கு, புரட்சிகர சக்திகள் கூடி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தை பலப்படுத்துவது எனும் நோக்கில் புதிய கூட்டமைப்பு உருவாக்க கூடியது.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. சு.ப. உதயகுமார் மற்றும் அதன் அரசியல் குழு பொறுப்பாளர் திரு மனோ.தங்கராஜ் ஆகியோர் வேண்டுகோளின்படி " அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் " எனும் பெயரில் சென்னையில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட தலைமைக்குழு உருவாக்கப் பட்டது. சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம்,கோவை, தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை என ஒன்பது மண்டல ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. வெற்றிகரமாக மாநாடு ,பேரணி, பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.