ஞாயிறு, 22 மே, 2011

சின்னக்குத்தூசி மறைந்தார்

மூத்த பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசி [எ] தியாகராசன் அவர்கள்
21  .5 .2011 .அன்று மறைந்தார். தோழமை பாலா மூலம் இன்று காலை
செய்தி அறிந்தேன். நன்றாகப் பேசுவார். கடைசியாக  ஹோமியோ
இராமசாமி, மஞ்சு, இனியன் ஆகியோருடன் நான் சென்னை பில்ரோத்
மருத்துவமனையில் சந்தித்தோம். அன்று அவருடைய பிறந்தநாள். கோவை
 செம்மொழி மாநாட்டுக்கு இடையூறாக, தி.மு.க.வுக்கு எதிராக திட்டமிட்டு
செய்வதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கான சாகும்வரை
உண்ணாவிரதத்தை கடுமையாகச் சாடினார். ஆழமான நினைவாற்றல்
உள்ளவர். நான் பில்ரோத் மருத்துவமனையில் 2008  ஜூலையில் இதய
அறுவை சிகிச்சை செய்து இருக்கும்போது என்னை நேரில் வந்து சந்தித்த
நிகழ்வு என் மனக்கண் முன்னே நிழலாடுகிறது.
          மூத்த பத்திரிக்கையாளர் இரா.ஜவகர் அவர்கள் மூலம் எனக்கு சின்னக்குத்தூசி அவர்கள் அறிமுகம். ஆழ்ந்த நினைவாற்றல்மிக்கவரான
அய்யாவின் இழப்பு கூர்மையான எழுத்துலகின் இழப்பு.                                                                      -மீ.த.பாண்டியன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக